Skip to main content

ட்ராஃபிக் சின்னங்களுக்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்கள்

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் !!!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
கட்டாய குறிப்புகள்
* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.
எச்சரிக்கை குறிப்புகள்
* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
அறிவுறுத்துகிற குறிப்புகள்
* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது.

இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.நன்றி நம்ம கடலூர்









Comments

Popular posts from this blog

ஆர்வம்(Interest) மற்றும் பேரார்வம் (Passion) இடையே உள்ள வேறுபாடுகள்

ஆர்வம் மற்றும் பேரார்வம் ஒன்றோடு ஒன்று ஒத்த இரண்டு உணர்வுகள். ஆர்வம் என்பது யாரோ அல்லது ஏதோவொன்றைப் பற்றி தெரிந்துகொள்ள அல்லது தெரிந்துகொள்ள விரும்பும் உணர்வு என விவரிக்கலாம். ஆர்வம் ஏதோவொன்றைப் பற்றி உற்சாகம் நிறைந்த உணர்வு. பேரார்வம் (Passion) மற்றும் ஆர்வத்திற்கும் இடையேயான முக்கிய வேறுபாடு அவற்றின் தீவிரத்தில் உள்ளது; ஆர்வத்தை விட பேரார்வம் (Passion) மிகவும் தீவிரமானது. ஆர்வம் என்றால் என்ன? ஆர்வம் என்பது தெரிந்து கொள்ள விரும்பும் உணர்வு அல்லது யாரோ அல்லது ஏதேனும் தெரிந்து கொள்ள விரும்பும் உணர்வு. அது உங்கள் கவனத்தை ஈர்க்கிறது. ஆர்வம் ஆவலிற்கு சற்றே ஒத்திருக்கிறது. நீங்கள் ஏதாவது ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள விரும்பினால், அதைப் பற்றி மேலும் அறிய வேண்டும். உதாரணத்திற்கு, கிரிக்கெட்டில் நீங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள விரும்பினால், கிரிக்கெட் போட்டிகளைக் காண வேண்டும் அல்லது கிரிக்கெட்டை எவ்வாறு விளையாடுவது என்று அறிய வேண்டும். இருப்பினும், பேரார்வம் (Passion) போன்று தீவிரமாக இருக்காது; நீங்கள் ஏதாவது ஒன்றின் மீது ஆர்வமாக இருக்கும...

இந்தியாவின் மிகவும் சவாலான சிறந்த ஏழு ஸ்கூட்டர்கள்

இந்தியாவின் மிகவும் சவாலான சிறந்த ஏழு ஸ்கூட்டர்கள் இந்தியாவில் ஸ்கூட்டர் சந்தை மிகவும் முதிர்ந்ததாக மாறிவிட்டது. பழைய பஜாஜ் சேடக் நாட்களில் இருந்து நவீன மின் ஸ்கூட்டர்கள் வரை, இந்த பிரிவில் ஒரு நீண்ட பாய்ச்சல் உள்ளது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, உற்பத்தியாளர்கள் சந்தையில் கினிடிக் பிளேஸ் (Kinetic Plus) போன்ற செயல்திறன் ஸ்கூட்டர்களைத் தொடங்க முயற்சித்தனர் ஆனால் மிகப்பெரிய விற்பனை'யை பெறவில்லை. செயல்திறன் ஸ்ட்டர்களின் மெதுவாக வளர்ந்து வருகிறது பல  உற்பத்தியாளர்களும் சந்தையில் மாக்ஸி ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. ஆனால் சந்தையில் தற்போது கிடைக்கக்கூடிய ஸ்கூட்டர்களில் சவாரி செய்ய வேடிக்கையாக உள்ள ஸ்கூட்டர்கள் எவை? நாங்கள் உங்களுக்கு இந்தியாவின் அத்தகைய ஏழு வேடிக்கையான சவாரி ஸ்கூட்டர்களை பற்றி கூறுகிறோம். 1.Aprilia SR150 Race Edition ஏப்பிரிலியா SR150 என்ற இரு சக்கர வாகன அறிமுகம் மூலம் இந்தியாவின் மலிவு பிரிவு சந்தையில் நுழைந்தது. சந்தையில் இருந்து ஒரு நல்ல பதிலைப் பெற்ற பிறகு இத்தாலிய உற்பத்தியாளரான ஏப்பிரிலியா ஆர்வமுள்ளவர...

ஜூனியர் இன்ஜினியர் (JE) / டிப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர் (DMS) / கெமிக்கல் மற்றும் உலோகவியல் (Metallurgy) உதவியாளர் (CMA) பணி

கல்வி தகுதி  BE / B.Tech (MECH, Auto, Electronics, Civil, CSE, IT), BSc (CS), டிப்ளமோ, BCA வேலை இடம் இந்தியா முழுவதும் கடைசி தேதி  31 ஜனவரி 2019 வேலை விவரம் CENTRALISED EMPLOYMENT NOTICE (CEN) No.03/2018 ஜூனியர் பொறியாளர் / டிப்போ பொருள் கண்காணிப்பாளர் / கெமிக்கல் மற்றும் உலோகவியல் (Metallurgy) உதவியாளர்  உள்ளிட்ட வேலை வாய்ப்புகள் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் (RRB) உள்ளது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் (RRB)   13487 பணிகளுக்கு ஆட்சேர்ப்பு  (பல்வேறு வகையான காலியிடங்கள்) நடைபெற உள்ளது, இளைஞர்களே பயன்படுத்தி கொள்ளுங்கள். வேலை வகை மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை ஜூனியர் பொறியாளர்: 12844 ஜூனியர் பொறியாளர் (தகவல் தொழில்நுட்பம் -IT): 29 டிப்போட் மெட்டீரியல் கண்காணிப்பாளர்: 227 இரசாயன மற்றும் மெட்டாலர்ஜிக்கல் உதவியாளர்: 387 தகுதிகள்: B.E/ B.Tech in Mechanical and Allied Engineering/ Electrical and Allied/ Engineering/ Electronics and Allied Engineering/ Civil and Allied Engineering/ Printing Technology/ Computer Science and ...